கம்பஹா மாவட்ட பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தங்களை பணியை மீண்டும் ஆரம்பித்துள்ளனர் என கம்பஹா மாவட்ட பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் சமிந்த சமர திவாகர தெரி வித்துள்ளார்.
தங்களின் கோரிக்கைக்குச் சுகாதார அதிகாரிகள் எழுத்துப்பூர்வமா தீர்வு வழங்கியமை அடுத்து கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியிலிருந்து விலகியிருந்த கம்பஹா மாவட்ட பொதுச் சுகாதார பரிசோதகர்களின் பணிப்பகிஷ்கரிப்பைக் கைவிடத் தீர்மானித்த நிலையில், கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை மீண்டும் ஆரம்பித்துள்ளனர் என கம்பஹா மாவட்ட பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

