வடக்கில் நேற்று சிறைக்கைதிகள் அறுவர் உட்பட 7 பேருக்கு கொரோனா: மருத்துவர் ஆ.கேதீஸ்வரன்

299 0

இவர்களில் 6 பேர் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்று முன்னெடுக்கப்பட்ட
451 பேரின் பி.சி.ஆர். பரிசோதனையில் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
செய்யப்பட்டது.

யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட 81 வயது வயோதிபப்பெண்ணுக்கு அறிகுறிகள் இருந்தமையால் மாதிரிகள் பெறப்பட்டன. அவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. மேலும், யாழ்ப்பாணம் சிறைச்சாலைகைதிகள் 15 பேரிடம் நேற்று மாதிரிகள் பெறப்பட்டு பி.சி.ஆர். பரிசோதனைக்குஉட்படுத்தப்பட்டன. இவர்களில் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்
பட்டது என்றார்.