கொரோனா தொற்றால் மரணிப்போர்களின் உடலை அடக்கம் மற்றும் தகனம் செய்வது குறித்த விடயத்தை அரசியலாக்க வேண்டாம் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
ஏனை நாடுகளில் இருக்கும் நடைமுறை, கணக்கில் எடுத்துக்கொண்டு விஞ்ஞான ரீதியாகச் சரியான வழிமுறையை அரசாங்கம் பின்பற்ற வேண்டும் என்று அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வலியுறுத்துகிறது.
அத்துடன், அனைத்து மக்களின் உரிமைகளையும் பாதுகாக்க அர சாங்கம் நேரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரச வைத்திய அதி காரிகள் சங்கத்தின் மத்தியக் குழு உறுப்பினர் வைத்தியர் ருவன் ஜய சூரிய தெரிவித்துள்ளார்.

