கிளி- உமையாள்புரம் பகுதியில் இன்று அதிகாலை சட்டவிரோதமாக முதிரை மரக்குற்றி கடத்தலில் ஈடுப்பட்ட ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.குறித்த நபர் கன்டர் ரக வாகனம் ஒன்றில் 11 முதிரை மரக்குற்றிகளை கடத்திச் செல்லும் போதே பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, இன்று அதிகாலை வீதி பாதுகாப்பு பணியில் இருந்த மாங்குளம் பொலிஸார் கொக்காவில் பகுதியில் வாகனம் ஒன்றை சோதனைக்காக நிறுத்தப்பட்ட போது இந்த வாகனத்தை நிறுத்தாமல் கொண்டு சென்ற போதே சந்தேகநபர் உமையாள்புரம் பகுதியில் கைதாகியுள்ளார்.
மேலும் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணையை மேற்கொண்டுவரும் மாங்குளம் பொலிஸார் கைப்பற்றப்பட்ட பல இலட்சம் பெறுமதியான 11 முதிரை மரக்குற்றிகளுடன் சந்தேகநபரை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

