இன்று காலை ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட இராணுவ அதிகாரிக்கு எதிரான கடுமையான சட்ட நடவடிக்கை எடுப்பதாக இராணுவ தளபதி ஜெனரல் தெரிவித்துள்ளார்.
ஹொரண பகுதியில் வைத்து 45 கிலோ கிராம் ஹெரோயினுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இராணுவ அதிகாரி ஒருவரும் இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்ற ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

