பொகவந்தலாவையில் ஒரு பகுதி முடக்கம்

233 0

ஹட்டன் – பொகவந்தலாவ செப்பல்டன் தோட்டத்திலுள்ள பி.சி. பிரிவு நேற்று இரவு முதல் பயணத்தடை விதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொகவந்தலாவ சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் இதை தெரிவித்துள்ளது.

அந்த தோட்டத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவர்கள் இருவர் உட்பட 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து அவர்கள் நெருக்கமாக இருந்த 100க்கும் மேற்பட்டவர்கள் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.