இந்நாட்டில் கொரோனா கட்டுப்பாட்டு வேலைத் திட்டத்தில் குறைபாடு ஏற்படக் காரணம் சுகாதார சேவையில் காணப்படும் வெற்றிடங்கள் தான் என்று அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டுகிறது.
பல பிரதான வைத்தியசாலைகளில் உள்ள வெற்றிடங்களை நிரப்ப நிரந்தர அடிப்படையில் அதிகாரிகள் நியமிக்கப்படவில்லை என இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர், வைத்தியர் சமந்த ஆனந்த தெரிவித்துள்ளார்.


