இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் யாழ் நூலகத்திற்கு விஜயம்!

211 0

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா பி ரெப்லிற்ஸ் அம்மையார்  இன்று (புதன்கிழமை) யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்திற்கு விஜயத்தினை மேற்கொண்டு பார்வையிட்டுள்ளார்.

இதன்போது நூலகத்தில் வைத்து யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணனையும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா பி ரெப்லிற்ஸ் அம்மையார் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

குறித்த சந்திப்பில் யாழ் மாநகர சபையின் ஆணையாளர் உள்ளிட்ட சில உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள தூதுவர் பல தரப்பினரையும் தொடர்ச்சியாக சந்தித்துவரும் நிலையிலேயே நூலகத்திற்கும் விஜயத்தினை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.