கைதிகளை பார்வையிட இணையத்தளத்தினுாடாக நேர ஒதுக்கீட்டு முறைமை

188 0

சிறைச்சாலைகளில் கைதிகளை பார்வையிட வருவோருக்கு காலதாமதமின்றி, நாள் மற்றும் நேரத்தை ஒதுக்கி கொண்டு பிரவேசிப்பதற்கான முறைமை ஒன்று திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த சேவையை பெற்றுக் கொள்ளவதற்காக சிறைச்சாலைகள் திணைக்களத்தின் இணையத்தளத்திற்குள் பிரவேசித்து தகவல் அமைப்பு ஊடாக நாள் மற்றும் நேரத்தை ஒதுக்கி கைதிகளை பார்வையிட முடியும்.

எதிர்காலத்தில் தொழில்நுட்ப முறையை பயன்படுத்தி சிறைச்சாலைகளில் ஏற்படும் பிரச்சனைகளை குறைத்து, கொவிட்19 காரணமாக கைதிகளுக்கும் அவர்களின் உறவினர்களும் தொடர்பு கொள்ளும் போது ஏற்படும் பிரச்சனைகளை குறைப்பதற்காக பல நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இந்த நிலையில் குறித்த இணையத்தள பகுதி மற்றும் செயலி சிறைச்சாலைகள் தகவல் தொழில்நுட்ப பிரிவினால் உருவாக்கப்பட்டு, நிர்வகிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.