ஆயுதங்களுடன் நபரொருவர் கைது

217 0
பாதாள உலகக்குழு தலைவரான மிதிகம சிந்தக என்ற ´ஹரக்கடா´வின் பிரதான உதவியாளர் ஒருவர் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப் படையின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய நேற்று (23) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெலிகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தம்மலவத்தை, கிழக்கு மிதிகம, அஹங்கம பிரதேசத்தில் வைத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது, 0.22 மில்லிமீற்றர் தோட்டா பயன்படுத்தப்படும் துப்பாக்கி ஒன்றும், டி56 ரக மெகசின் ஒன்றும், டி 56 தோட்டாக்கள் 22 மற்றும் மூன்று வாள்களும் மீட்கப்பட்டுள்ளன.

நபரொருவரை வாளால் வெட்டி படுகாயமடையச் செய்த சம்பவம் தொடர்பில் குறித்த சந்தேகநபருக்கு எதிராக முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.