வ.புதுப்பட்டியில் நாளை ஜல்லிக்கட்டு- தயார் நிலையில் வாடிவாசல்

16 0

வத்திராயிருப்பு அருகே நாளை நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டிக்காக வாடிவாசல் தயார் நிலையில் உள்ளது. 150 காளைகளும், 150 மாடுபிடி வீரர்களும் களம் இறங்குகின்றனர்.

வத்திராயிருப்பு தாலுகாவுக்கு உட்பட்ட வ.புதுப்பட்டியில் நாளை (புதன்கிழமை) ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. இதையொட்டி வாடிவாசல் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகள் மற்றும் வெளி ஊர்களில் இருந்து 150 காளைகளும், 150 மாடுபிடி வீரர்களும் பங்குபெற உள்ளனர்.

இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெறும் காளைகள் மற்றும் வீரர்களுக்கு தங்க நாணயம், கட்டில், பீரோ, டி.வி, பிரிட்ஜ் உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் வழங்கப்பட உள்ளன.

மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகள் பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே போட்டியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுகிறார்கள்.

ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாட்டினை வ.புதுப்பட்டி ஊர் பொதுமக்கள் மற்றும் விழா கமிட்டியினர் செய்துள்ளனர்.