கல்குவாரியில் பயங்கர வெடிவிபத்து- 5 பேர் உயிரிழப்பு

22 0

கர்நாடக மாநிலத்தில் நேற்று இரவு கல்குவாரியில் வெடிபொருட்கள் வெடித்து சிதறியதில் 5 பேர் உயிரிழந்தனர்.

கர்நாடக மாநிலம் சிக்கபல்லபூர் மாவட்டம் ஹிரங்காவல்லியில் உள்ள கற்குவாரியில் நேற்று இரவு பயங்கர வெடிவிபத்து நிகழ்ந்தது. இதில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும் சிலர் காயமடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாகவம், வெடித்தது சட்டவிரோதமாக வாங்கி வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் என்றும் அதிகாரி ஒருவர் கூறி உள்ளார். சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
இந்த சம்பவம் குறித்து அரசு விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கனிமவளத்துறை அமைச்சர் முருகேஷ் நிரானி கூறினார். சிவமொக்காவில் நடந்த சம்பவம் போன்று மற்றொரு சம்பவம் நடந்திருப்பதாகவும் அவர் கவலை தெரிவித்தார்.