இலங்கையில் இதுவரையில் 3 இலட்சத்து 38 ஆயிரத்து 769 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது

202 0

இலங்கையில் இதுவரையில், 3 இலட்சத்து 38 ஆயிரத்து 769 பேர் தடுப்பூசியைப் பெற்றுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது

நேற்று மாத்திரம் ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராசெனெகா கோவிஷீல்ட் தடுப்பூசி 35 ஆயிரத்து 912 பேருக்கு  செலுத்தப்பட்டது.

ஜனவரி 29ஆம் திகதி தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இலங்கையில் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், நேற்றுமுன்தினம் அதிகள அளவிலான அதாவது 39 ஆயிரத்து 78 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.