வாஷிங்டன் மாகாணத்தில் தமிழ் பாரம்பரிய தினம்

245 0

வாஷிங்டன்; அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில், மார்ச், 9ல், தமிழ் பாரம்பரிய தினம் கொண்டாடப்பட உள்ளது.

அமெரிக்காவின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள வாஷிங்டன் மாகாணத்தில், அதிக அளவிலான தமிழ் மக்கள் வசிக்கின்றனர். இதை கருத்தில் வைத்து, அவர்களை போற்றும் விதமாக, தமிழ் பாரம்பரிய தினத்தை கொண்டாட, மாகாண கவர்னர் முடிவு செய்துள்ளார். அதற்கான அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது.

இது குறித்து, வாஷிங்டன் மாகாண கவர்னர் ஜே இன்ஸ்லீ வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:வாஷிங்டன் மாகாணத்தில், தமிழ் மக்கள், 9,000 பேர் வசிக்கின்றனர். அவர்களின் தனித்துவமான பூர்வீக மரபுகளை அங்கீகரிக்கும் வகையில், அவர்களின் பாரம்பரியத்தை கொண்டாட முடிவு செய்துள்ளோம்.

latest tamil news

 

உலகின் மிகப் பழமையான மற்றும் தொன்மையான தமிழ் மொழி, அங்கீகாரம் பெற தகுதியுடையது. தமிழ் கலாசாரம் மற்றும் பாரம்பரியம், கனடா நாட்டின் பல பகுதிகளில் கவுரவிக்கப்பட்டு வருகின்றன.அந்த வகையில், வாஷிங்டன் மாகாணத்தில், தமிழ் மொழியை அங்கீகரிக்க முடிவு செய்துள்ளோம். அதன்படி, இங்கு, மார்ச், 9ம் தேதி, தமிழ் பாரம்பரிய தினமாக கொண்டாடப்படும். அந்த சிறப்பான நாளன்று, மாகாண மக்கள் அனைவரும் என்னுடன் இணைந்து கொண்டாடவேண்டும் என, வேண்டுகிறேன். இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.