நாடாளுமன்ற உறுப்பினர்கள் தடுப்பூசி போடுவதற்கான கால அவகாசம் நீடிப்பு!

171 0

கொரோனா தடுப்பூசியைச் செலுத்தத் தவறியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள், தடுப்பூசி செலுத்துவதற்காக கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை தேசிய கொவிட்-19 தடுப்புச் செயலணியால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்றப் படைக்களச் சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, எதிர்வரும் 23, 24 மற்றும் 25ஆம் திகதிகளில் ஒக்ஸ்ட்போர்ட் அஸ்ட்ரா செனேகா/கொவிசீல்ட் தடுப்பூசிகளைச் செலுத்துவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், குறித்த காலப்பகுதியில் கொழும்பு நாரஹேன்பிடியில் அமைந்துள்ள இராணுவ வைத்தியசாலையில் காலை 8.30 மணி தொடக்கம் மதியம் 12.00 மணி வரை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு குறித்த தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்வரும் வாரத்தில் கொழும்பிற்கு வருகைதந்து நாடாளுமன்றக் கூட்டத்தொடர்களில் கலந்துகொள்ளவுள்ள நிலையில், கொவிட் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.