பிசிஆர் கொரோனா பரிசோதனை முடிவை கட்டாயம் கொண்டு வர வேண்டும்- பொதுமக்களுக்கு போலீசார் அறிவுறுத்தல்

295 0

துபாய் நகரில் உள்ள போலீஸ் துறை அலுவலகங்களுக்கு செல்லும் பொதுமக்கள் நாளை (சனிக்கிழமை) முதல் பிசிஆர் கொரோனா முடிவுகளை கட்டாயம் எடுத்து செல்ல வேண்டும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

துபாய் போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
துபாய் போலீஸ் துறை தலைமை அலுவலகம், அனைத்து பகுதிகளில் உள்ள போலீஸ் நிலையங்கள் மற்றும் போலீஸ் துறையின் மகிழ்ச்சிப்படுத்தும் வாடிக்கையாளர் சேவை மையங்கள் ஆகிய அலுவலகங்களுக்கு பல்வேறு சேவைகளை பெறுவதற்கு நேரில் செல்வோர் கட்டாயம் பிசிஆர் கொரோனா சோதனை முடிவுகளை கையில் எடுத்து செல்ல வேண்டும்.
அதில் கொரோனா தொற்று இல்லை (நெகட்டிவ்) என்ற முடிவு இருக்க வேண்டும். இந்த பிசிஆர் சோதனை முடிவுகள் அதனை பெற்ற 48 மணி நேரத்திற்கு செல்லுபடியாகும்.
இதில் அமீரக தேசிய கொரோனா தடுப்பூசி திட்டத்தின்கீழ் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் பிசிஆர் முடிவுகள் இல்லாமல் போலீஸ் அலுவலகங்களுக்கு வருகை புரிய அனுமதி வழங்கப்படுகிறது.
எனவே பொதுமக்கள் துபாயில் ஆளில்லாமல் செயல்படும் ஸ்மார்ட் போலீஸ் நிலையங்கள் மற்றும் 901 என்ற அவசரமில்லா தொலைபேசி எண் ஆகியவற்றை பயன்படுத்தி போலீஸ் துறையின் சேவைகளை பெறும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த விதிமுறையானது நாளை (சனிக்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.