புயல் பாதிப்புக்கு ரூ.1,000 கோடி நிவாரண நிதி வேண்டும்

273 0

2108773796untitled-1வர்தா புயல் பாதித்த பகுதிகளில் உடனடி நிவாரண பணிகளுக்காக மத்திய அரசின் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து முதல் கட்டமாக ரூ.1,000 கோடி வழங்க கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கடிதம் எழுதி உள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது,
வர்தா புயல் தாக்கியதில் சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் உள்ளிட்ட தமிழக மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. தமிழக அரசு அதிகாரிகள் புயல் பாதிப்புகளை ஆய்வு செய்து வருகின்றனர். ஆய்வு முழுமை பெற 3 நாட்கள் ஆகும். ஆய்வுக்கு பின்னர், முழுமையான சேத விவரம் விரிவான அறிக்கையாக தயாரித்து மத்திய அரசுக்கு அளிக்கப்படும்.

அதற்கு முன்னதாக, புயல் பாதித்த பகுதிகளில் உடனடி நிவராண பணிகளுக்காக மத்திய அரசின் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து முதல்கட்டமாக ரூ.1,000 கோடி வழங்க வேண்டும். மேலும், புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய அரசின் குழுவை அனுப்ப வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.