பெரும்பான்மை மக்களை குஷிப்படுத்த அரசு முயற்சி – ஹேஷா விதானகே

286 0

இன்று சகல விவகாரங்களிலும் இந்த அரசாங்கம் நாடகம் ஆடுகின்றது. சர்வதேச அரங்கில் தோற்பார்கள் என்று தெரிந்து கொண்டே நாட்டில் பெரும்பான்மை மக்களை குஷிப்படுத்த முற்படுகின்றனர் என ஐக்கிய மக்கள் சக்கி பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பி்லேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்:-

20ஆவது திருத்தத்துக்கு மூன்றில் இரண்டு ஆதரவு கொடுத்தும் மக்கள் தொடர்பாக என்ன நலன் திட்டங்களை முன்னெடுத்தார்கள்?
மரண தண்டனை குற்றம் நீதிமன்றில் ஒப்புவிக்கப்பட்ட பிரேமலால் ஜயசேகரவை விடுதலை செய்ய நடவடிக்கை எடுத்ததை அவருக்கு வாக்களித்த மக்களும் நிராகரித்தார்கள்.

விடுதலை செய்ப்பட்ட அந்த நாளின் பிரதான செய்தியை மறக்கடிக்க மாடறுப்பு  தடையை சோடிக்கப்பட்ட பிரதான கருத்தாக கட்டமைத்து, சமூகமயப்படுத்தி மக்களின் கவனத்தை உப விடயங்களின் பக்கம் திருப்பினார்கள்.

இது எப்படி ஒரு நாடகமாக இருந்ததோ அதை ஒத்த ஒரு நாடகத்தை விமல் மற்றும் சாகர காரியவசம் என்ற பிரதான இரு நடிகர்களைக் கொண்டு அரங்கேற்றியுள்ளது இந்த அரசாங்கம்.

இன்று சகல விவகாரங்களிலும் பாரிய நாடகம் ஆடுகின்றனர். சர்வதேச அரங்கில் தோற்பார்கள் என்று தெரிந்து கொண்டே நாட்டில் பெருன்பான்மை மக்களை குஷிப்படுத்த முற்படுகின்றனர்.

சதோசவுக்கு பெறுப்பான அமைச்சருக்கும் தெரியாமல் பொருட்களின் விலைகள் நிர்ணயம் செய்யப்படுகின்றன. இவ்வாறு செய்வது யார்? அமைச்சரையும் தான்டி அதிகாரம் கொண்ட நபர்கள் யார்?-என்றார்.