பேரணியைத் தடுக்க மந்திகையில் சிங்கள பொலிஸார் வீதி மறியல்- தடைகளை உடைத்தெறிந்து முன்னேறிய வீரத்தமிழர் பேரணி !

409 0

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான அகிம்சை வழிப் பேரணியைத் தடுக்க மந்திகை மடத்தடியில் வீதி மறியல் செய்து பொலிஸார் தடை ஏற்படுத்திய போதும் மக்கள் எழுச்சி அதனை உடைத்து முன்னெறியது.

பருத்தித்துறை நோக்கிப் பேரணி பயணித்த போது மந்திகை மடத்தடியில் வீதியின் குறுக்கே நின்று பொலிஸார் நீதிமன்றத் தடை உத்தரவை வைத்து தடுக்க முயன்றனர்.

அத்துடன், பேரணியில் வந்தோரைப் பதிவு செய்தே அனுமதிக்க முடியும் என்றும் பொலிஸார் தெரிவித்தனர். எனினும், பெரும் திரளான மக்கள் எதிர்ப்பை வெளியிட்டதால் பொலிஸார் அகன்றமை குறிப்பிடத்தக்கது.