நாட்டில் தமிழ் மக்களின் உரிமையை வென்றெடுக்கும் போராட்டமாகவே பொத்துவில் முதல் பொலிகண்டி போராட்டம் இடம்பெற்று வருவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ்ஜின் துணைவியார் சசிகலா ரவிராஜ் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்நிலையில், இந்தப் பேரணி வடக்கில் நிறைவடையும் வரை அனைத்துத் தரப்பினரும் பூரண ஆதரவை வழங்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
யாழில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அவர், தமிழர் மீதான அடக்குமுறைகளுக்கு எதிரான போராட்டமே இடம்பெறுவதாகவும், இது சிங்கள மக்களுக்கு எதிரானது அல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

