மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள காத்தான்குடி வாவியில் விழுந்து இளைஞர் ஒருவர், இன்று (04) காணாமல் போயுள்ளார்.
மஞ்சந்தொடுவாய் பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயது இளைஞரே இவ்வாறு வாவியில் காணாமல் போயுள்ளதாக தெரிய வருகின்றது.
இந்த இளைஞர் ஒரு மீனவர் எனவும் வாவியில் நிறுத்தப்பட்டிருந்த மீன்பிடி படகில் காணப்பட்ட வலையை ஒழுங்குவதற்காக சிறிய தோணி ஒன்றில் படகை நோக்கி சென்று கொண்டிருந்த போது தவறி விழுந்து காணாமல் போயுள்ளதாக தெரிய வருகின்றது.
இது தொடர்பாக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் இளைஞனை தேடும் பணிகள் இடம்பெற்று வருவதாகவும் காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

