விடுதலைப்புலிகளிற்கு உதவிய மற்றும் சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட தமது உறவுகளை விடுதலை செய்யக்கோரி ஆரம்பிக்கப்பட்ட தொடர் போராட்டம் நான்காவது நாளாக இன்றும் (வியாழக்கிழமை) தொடர்கின்றது.
கடந்த திங்கட்கிழமை கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக பந்தல் அமைக்கப்பட்டு ஆரம்பிக்கப்பட்ட இந்தப் போராட்டம் தொடர் போராட்டமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில், இன்று நான்காவது நாளாகவும் போராட்டக்காரர்கள் தமது உறவுகளை விடுதலை செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

