விடுதலைப் புலிகளுக்கு எதிரான நிலைப்பாட்டில் தமிழக தலைவர்கள்?

296 0

shivshankar_menon_20090312இறுதி யுத்தம் இடம்பெற்றக் காலப்பகுதியில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான இந்திய மத்திய அரசாங்கத்தின் நிலைப்பாட்டை தமிழ் நாட்டு அரசியல் தலைவர்கள் ஆதரித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன், இந்திய வெளிவிவகார கொள்கை தொடர்பான தமது நூலில் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.

இறுதி யுத்தக் காலத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை பாதுகாக்க அமெரிக்காவும் நோர்வேயும் முயற்சித்தன.

ஆனால் இதற்கு எதிரான நிலைப்பாட்டையே இந்தியா கொண்டிருந்தது.

அதேநேரம், இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டிருந்த தமிழ் தலைவர்களுக்கு நடந்ததைப் போல, தங்களுக்கும் நடக்கலாம் என்பதை தமிழக அரசியல் தலைவர்கள் அறிந்திருந்தனர்.

இந்த நிலையில் விடுதலைப் புலிகள் குறித்த இந்திய அரசாங்கத்தின் கொள்கைக்கு, தனிப்பட்ட வகையில் தமிழக அரசியல் தலைவர்கள் பலர் ஆதரவு தெரிவித்தனர்.

எனினும் இதனை அவர்கள் வெளிப்படையாக அறிவிக்கவில்லை என்று அவர் கூறியுள்ளார்.