நாடாளுமன்ற சபை இன்று கூடுகிறது

213 0

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நாடாளுமன்ற சபை இன்று (புதன்கிழமை) கூடுகிறது

சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று நண்பகல் 12.30 மணியளவில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது.

இக்கூட்டத்தில், பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிற்காக ஜனாதிபதியால் பரிந்துரைக்கப்பட்டுள்ள பெயர்கள் தொடர்பாக பரிசீலிக்கப்படவுள்ளன.

20ஆவது அரசியலமைப்பு திருத்தம் மூலம் ஸ்தாபிக்கப்பட்ட நாடாளுமன்ற சபையில், மஹிந்த ராஜபக்ஷ, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, டக்ளஸ் தேவானந்தா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாஷீம் உள்ளிட்டோர் உறுப்பினர்களாக செயற்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கட்சி தலைவர்களின் கூட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ளது.

காலை 9.30 மணிக்கு நடைபெறவுள்ள கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் நாடாளுமன்ற அமர்வுகளில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள பிரேரணைகள் மற்றும் எதிர்கால செயற்பாடுகள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளன.