அரசாங்கம் இலங்கையை வல்லரசுகளின் மோதல் களமாக மாற்றியுள்ளது- ஐக்கிய மக்கள் சக்திஎ

209 0

வெளிவிவகார கொள்கையை தவறாக கையாண்டதன் காரணமாக அரசாங்கம் இலங்கையை வல்லரசுகளின் மோதல்களமாக மாற்றியுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தி குற்றம்சாட்டியுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.

இலங்கையை இதுவரை ஆண்ட 11 தலைவர்கள் சமநிலை தவறாத வெளிவிவகார கொள்கையை பின்பற்றினார்கள் என லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.
ஆனால் முன்னைய மகிந்த ராஜபக்ச அரசாங்கமும் தற்போதைய அரசாங்கமும் சீனாவிற்கு பெருமளவு இடத்தை வழங்கியதன் மூலம் அந்த வெளிவிவகார கொள்கையை பின்பற்றவில்லை என லஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.
இந்த அரசாங்கமும் முன்னைய அரசாங்கமும் சீனாவிடமிருந்து அதிகளவு கடன்களை பெற்றதன் காரணமாக சீனா இலங்கை விவகாரத்தில் அதிகளவு தலையிட்டு;ள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது இலங்கையை வல்லரசுகளின் மோதல்களமாக மாற்றியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.