பலமுறை நேரடியாக தெரிவித்தும் ஒட்டுசுட்டான் வைத்தியர் நிரேகாவின் செயற்பாட்டைக் கண்டுகொள்ளாத பிராந்திய சுகாதாரசேவை பணிப்பாளர்(படங்கள்)

465 0

 

doctor-1தற்சமயம் உலகறிந்த அநாகரிக செயற்பாட்டு நபராக இருப்பவர்; ஒட்டுசுட்டான் பிரதேச வைத்தியசாலை வைத்தியர்.

இவர் வைத்தியசாலையில் நடந்து கொள்ளும் விதத்தால்; மக்கள் பெரும் துன்பத்தை அனுபவித்து வருகின்றனர்.

இவருடைய செயற்பாடுகளாக பல செயற்பாடுகள் அப்பகுதி மக்களால் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளன.

வைத்தியசாலைக்கு காலம் தாழ்த்தி வருவது- நோயாளிகள் அவசரநிலையில் வைத்தியசாலைக்கு வந்தால் ஒட்டுசுட்டான் பிரதேசவைத்தியசாலை வைத்தியர் அரைமணி நேரத்திற்கு பின்பே வருகிறார்.

மருத்துவமனை படுக்கை தொகுதியில்  வைக்கப்பட்டுள்ள நோயாளரை கூட இவர் சென்று பர்வையிடுவதில்லை. அவர்கள் தான் வைத்தியரை சென்று பர்வையிடுகின்றனர். இவரின் தனிப்பட்ட செயற்பாடுகளால் மக்களுடன் இவர் முரண்பட்டதால் பிரதேசவைத்தியசாலைக்கு வருவதற்கு அனைவரும் அஞ்சுகின்றனர். அவசரநிலையில் வந்தாலும் இவர் அவர்களை திட்டுவதும் மற்றும் ஏளனமாகவும் பார்க்கிறார் என மக்கள் கூறுகின்றனர். இந்த வைத்தியரின் செயலால் பல நோயாளிகள் ஒட்டுசுட்டான் பிரதேசவைத்தியசாலை செல்வதை விடுத்து மாஞ்சோலை வைத்தியசாலைக்கு செல்கின்றனர்.

எல்லா மக்களுக்கும் சேவை செய்ய வேண்டும் என்றே படிப்பார்கள். படித்து முடித்தவுடன் தனியார் மருந்தகம் ஆரம்பிப்பார்கள். இதற்கு இவரும் விதிவிலக்கல்ல மக்களுக்கும் சேவை செய்வதை விடுத்து மக்களின் பணத்தை சுரண்டுகின்றார். இப்படியான நிலைகளை கருத்தில் கொண்டு மக்கள் ஒட்டுசுட்டான் பிரதேசசெயலகத்தில் இடத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் அமைச்சர் முன்னிலையில் இவருடைய நடவடிக்கைகள் தெரிவிக்கப்பட்டது. அவ்வாறு மக்கள் தெரிவித்தும். பிராந்திய சுகாதாரசேவை பணிப்பாளரால் எதுவித நடவடிக்கையும்

எடுக்கப்படவில்லை இதற்கு காரணம் அவருடைய அரசியல், பிராந்திய சுகாதாரசேவை பணிப்பாளர் செல்வாக்கே ஆகும்.  இப்படியான செயலுக்கு பிராந்திய சுகாதாரசேவை பணிப்பாளர் எவ்வாறு ஆதரவு தெரிவிக்கின்றார்? வைத்தியர் நிரேகாவுடன் முரண்பட்டால் அவர்களை ஊரைவிட்டே விரட்டிவிடுவார். இவரின் முரண்பாட்டு செயற்பாட்டால் ஒட்டுசுட்டான் பிரதேச வைத்தியசாலைக்கு சென்றால் தமக்கும் தமது குடும்பத்திற்கும் பிரச்சனை ஏற்படும் என அஞ்சி  ஒட்டுசுட்டானில் வசித்த 6 குடும்பங்கள் முல்லைத்தீவைவிட்டு பிற மாவட்டங்களுக்கு சென்று வசிக்க தொடங்கியுள்ளன. இப்படி எத்தனை குடும்பங்கள் தாம் பிறந்த மண்ணை விட்டு செல்ல போகின்றதோ தெரியவில்லை. இவரின் நிலைபற்றி வீட்டுத்தரிசிப்பு முறையிலான நடமாடும் மருத்துவ பராமரிப்பு சேவை வழங்கும் ஆரம்ப நிகழ்வில் தமது பிரச்சனை பற்றி மக்கள் கூறிய போதும் இவரின் செயற்பாடுபற்றி மக்கள் எத்தனையோ தடவைகள் கடிதங்கள் பிராந்திய சுகாதாரசேவை பணிப்பாளருக்கு அனுப்பியும் எந்தவித நடவடிக்கையையும் அவர் எடுக்கவில்லை.

இவ்வாறு குறித்த பகுதி மக்கள் தமது கவலைகளை வெளிப்படுத்தியுள்ளனர்.

doctor doctor-4 doctor-3 doctor-1