அலப்போ குறித்த அமெரிக்க ரஷ்ய பேச்சு வார்த்தை தோல்வி

397 0

coltkn-02-04-fr-04171337856_3996187_03022016_mss_gryஅலப்போவில் உள்ள ஆயுததாரிகளை பாதுகாப்பாக வெளியேற்றுவது தொடர்பாக அமெரிக்கா மற்றும் ரஷ்யாவிற்கு இடையே இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளில் இணக்கப்பாடு எட்டப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்ய வெளிவிவகாரத்துறை பிரதி அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

எனினும் இந்த விடயம் தொடர்பான அமெரிக்கா மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான பேச்சுவார்த்தைகள் ஜெனீவாவில் தொடர்ந்தும் இடம்பெறும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆயுததாரிகளை பாதுகாப்பாக வெளியேற்றுவதனை விட முற்றுகைக்கு உள்ளாகியுள்ள பொதுமக்களை வெளியேற்றுவது குறித்தே ரஷ்யா அதிகம் கவனம் செலுத்துவதாக பிரதி வெளிவிவகாரத்துறை அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேவேளை, ரஷ்ய துருப்பினரின் உதவியுடன், சிரிய இராணுவம் இதுவரை அலப்போவின் 80 சத வீதமான நிலப்பரப்பினை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளனர்.

இதன் காரணமாக ஆயிரக்கணக்கான யுத்தத்துடன் தொடர்பற்ற பொது மக்கள் குடிநீர் மற்றும் அடிப்படையற்ற நிலையில் பெரும் சிரமத்தை எதிர்நோக்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேவேளை, சிரிய தொலைக்காட்சி மதிப்பீட்டிற்கு அமைய கிழக்கு அலப்போ பிரதேசத்தில் இருந்து 70 ஆயிரம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளதாக தெரவிக்கப்பட்டள்ளது.

இதற்கு அமைய அண்மைக்காலத்தில் 2 லட்சத்து 75 ஆயிரம் மக்கள் அலப்போவை விட்டு வெளியேறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.