கொரோனா தடுப்பூசியை இலங்கைக்கு கொண்டு வரவுள்ள விமானத்தின் வருகையில் தாமதம்

176 0

கொரோனா தடுப்பூசியை இலங்கைக்கு கொண்டு வரவுள்ள மும்பை விமானத்தின் புறப்படுகையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த விடயம் தொடர்பாக ருவிட்டரில் பதிவிட்டுள்ள ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம், மும்பையின் சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்திலிருந்து கொரோனா தடுப்பூசியை இலங்கைக்கு கொண்டு செல்லும் விமானம் தாமதமானது என்று பதிவிட்டுள்ளது.

இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள ஒக்ஸ்போர்ட்- அஸ்ட்ராஜெனெகா கொவிட்- 19 தடுப்பூசிகள்  இன்று (வியாழக்கிழமை) நாட்டிற்கு கொண்டுவரப்படவுள்ளன.

இன்று  முற்பகல் 11 மணியளவில், அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசிகளை கொண்டுவரும் விமானம் நாட்டை வந்தடையவுள்ளதாக  விமான நிலையம் மற்றும் விமான சேவைகளின் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி தெரிவித்திருந்தார்.

இந்த நிலையிலேயே கொரோனா தடுப்பூசியை இலங்கைக்கு கொண்டு வரவுள்ள மும்பை விமானத்தின் புறப்படுகையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் பொருட்டு இந்திய அரசு, 5 இலட்சம் அஸ்ட்ராஜெனெகா கொவிட்- 19 தடுப்பூசிகளை நன்கொடையாக இலங்கைக்கு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.