துருக்கி கால்பந்து திடல் குண்டுவெடிப்பு தாக்குதல் சம்பவத்திற்கு குர்தீஷ் கிளர்ச்சியாளர் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
துருக்கியின் மிகப்பெரிய பழமையான நகரமான இஸ்தான்புல்லில் கால்பந்து திடல் அருகே நடத்தப்பட்ட அடுத்தடுத்த குண்டுவெடிப்பு தாக்குதல்கள் நாட்டையே குலுக்கி உள்ளது. இந்தத் தாக்குதலில் இதுவரை 38 பேர் உயிரிழந்தனர். 150-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
இஸ்தான்புல் நகரின் மையப் பகுதியிலுள்ள கால்பந்து திடல் அருகே முதலில் ஒரு கார்க் குண்டு வெடித்துச் சிதறியது. அடுத்த 45 வினாடிகளில் தனது உடலில் வெடிகுண்டுகளைக் கட்டியிருந்த ஒரு தீவிரவாதி வெடித்து சிதறினான்.
இரண்டு குழுக்களுக்கு இடையேயான கால்பந்து ஆட்டம் முடிந்த சிறிது நேரத்தில் திடலுக்கு வெளியே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக தெரிகிறது.
இந்நிலையில், துருக்கி கால்பந்து திடல் குண்டுவெடிப்பு தாக்குதல் சம்பவத்திற்கு குர்தீஷ் கிளர்ச்சியாளர் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

