மன்னாரில் கொரோனாவுக்கு இரண்டாவது நபர் பலி

280 0

மன்னார் பொது வைத்தியசாலை சிகிச்சை பெற்று வந்த நிலையில் வீடு திரும்பிய ஒருவர் நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். இவருக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப் பட்டுள்ளது.

 

இவரது மரணத்தையடுத்து மன்னார் மாவட்டத்தில் இரண்டாவது கொரோனா இறப்பாகப் பதிவாகியுள்ளதுடன், வடக்கு மாகாணத் தில் கொரோனா நோயால் உயிரிழந்த மூன்றாவது நபர் இவராவார்.

மன்னார் சிலாவத்துறையைச் சேர்ந்த 63 வயதுடைய இஸ்லாமியர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார்.

இவர் நாட்பட்ட நோயால் பாதிப்பட்ட நிலையில் மன்னார் பொது வைத்தியசாலையில் கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் வீடு திரும்பியிருந்தார்.

உயிரிழந்தவரின் மாதிரிகள் எடுக்கப்பட்டு பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் கொரோனா நோய்த் தொற்றுக்குள்ளாகியமை உறுதிப்படுத்தப்பட்டுள்து.