தீபா எதிரிசிங்க தாக்கல் செய்த மனு நிராகரிப்பு

287 0

தங்களை கைது செய்வதை தடுப்பதற்காக சுவர்ணமஹல் நிறுவனத்தின் பணிப்பாளர்கள் மூவர் பிணை எதிர்பார்த்து தாக்கல் செய்த மனுக்களை எதிர்வரும் 27 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இருப்பினும் குறித்த நிறுவனத்தின் பணிப்பாளர்களில் ஒருவரான தீபா எதிரிசிங்க தாக்கல் செய்த மனுவில் பதிப்பில் ஏற்பட்டிருந்த தவறு காரணமாக குறித்த மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு பிரதான நீதவான் மொஹமட் மிஹாலினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் நாலக எதிரிசிங்க, ஜீவக எதிரிசிங்க மற்றும் அசங்க எதிரிசிங்க ஆகியோரினால் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் எதிர்வரும் 27 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

குறித்த மனுக்களின் பிரதிவாதியான குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பொறுப்பதிகாரிக்கு அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.