கென்யா: டேங்கர் லாரி வெடித்த விபத்தில் 30 பேர் பலி

342 0

கிழக்காப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கென்யாவில் ரசாயன எரிவாயு ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி பிற வாகனங்களுடன் மோதி வெடித்த விபத்தில் 30 பேர் உயிரிழந்தனர்.

கென்யா தலைநகர் நைரோபியில் இருந்து நைவாஷா நகரை இணைக்கும் பிரதான நெடுஞ்சாலை வழியாக ரசாயன எரிவாயு ஏற்றிய ஒரு டேங்கர் லாரி உகான்டா நாட்டுக்குச் சென்று கொண்டிருந்தது.

நேற்று பின்னிரவு, நைவாஷா நகரின் வடக்கே சுமார் 10 கிலோமீட்டர் தூரத்தில் வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, அந்த சாலையில் வந்த இதர வாகனங்களின்மீது பயங்கரமாக மோதியது.

மோதிய வேகத்தில் லாரியில் இருந்த ரசாயன எரிவாயு டேங்கர் தீக்கோளமாக வெடித்து சிதறியது. இந்த தீயில் பத்துக்கும் அதிகமான வாகனங்கள் சிக்கிக் கொண்டன.

அந்த வாகனங்களில் இருந்த 30 பேர் உடல்கருகி பலியானதாகவும், 40-க்கும் அதிகமானவர்கள் தீக்காயங்களுடன் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.