அவனியாபுரத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டை பார்வையிடுகிறார் உதயநிதி ஸ்டாலின்

21 0

மதுரை அவனியாபுரத்தில் நாளை நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பார்வையிடுகிறார்.

தமிழர் திருநாளாம் பொங்கல் தினத்தன்று, ‘ராகுலின் தமிழ் வணக்கம்’ என்ற பெயரில், தமிழர்களின் பாரம்பரியம் மிக்க, பெருமை மிக்க விவசாயிகளின் சின்னமான காளையை அடக்குகிற ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் தலைவர் ராகுல்காந்தி கலந்து கொண்டு பார்வையிடுகிறார்.

பொங்கல் தினத்தன்று (நாளை) காலை 11 மணியளவில் மதுரை அவனியாபுரத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 4 மணி நேரம் அங்கேயே செலவிடுகிறார்.

இந்நிலையில் மதுரை அவனியாபுரத்தில் நாளை நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பார்வையிடுகிறார்.

காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தியும் நாளை மதுரை செல்ல உள்ள நிலையில் இருவரும் சந்திக்க வாய்ப்பு உள்ளது.