விரைவில் மற்ற வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்படும்- அமைச்சர் செங்கோட்டையன்

23 0

விருப்பமுள்ள 10, 12ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிகளுக்கு வரலாம் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற 19-ந்தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

* முதல்கட்டமாக திறக்கப்படும் 10, 12ம் வகுப்புகளுக்காக 6,029 பள்ளிகள் தயாராக உள்ளன.

* விருப்பமுள்ள 10, 12ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிகளுக்கு வரலாம்; 98% மாணவர்கள் பள்ளிக்கு வர விருப்பம் தெரிவித்துள்ளனர்.

* ஆய்வுக்கு பிறகு மற்ற வகுப்புகளுக்கு படிப்படியாக பள்ளிகள் திறக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.