பினாமி சொத்து வழக்கு – ராபர்ட் வதேராவிடம் வருமான வரித்துறை விசாரணை

193 0

பினாமி சொத்து வழக்கு தொடர்பாக ராபர்ட் வதேராவிடம் விசாரணை நடத்தி வாக்குமூலத்தை வருமான வரித்துறை அதிகாரிகள் பதிவு செய்து கொண்டனர்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகனும், அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியின் கணவருமான ராபர்ட் வதேரா மீது பினாமி சொத்து தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக வருமானத்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இங்கிலாந்தில் பினாமி சொத்துகள் இருப்பதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டு இருந்த விசாரணை நடந்து வருகிறது. இதுதொடர்பாக பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையும் விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக ராபர்ட் வதேராவுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி இருந்தது. ஆனால் கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை காரணம் காட்டி அவர் விசாரணைக்கு ஆஜராவில்லை.

இதையடுத்து, நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் டெல்லி சுவ்தேவ் விகார் பகுதியில் உள்ள ராபர்ட் வதேராவின் வீட்டுக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் சென்றனர். அங்கு வழக்கு தொடர்பாக ராபர்ட் வதேராவிடம் விசாரணை நடத்தி வாக்குமூலத்தை வருமான வரித்துறை அதிகாரிகள் பதிவு செய்து கொண்டனர்.