இரத்தினபுரி போதனா வைத்தியசாலைக்கு அவசரத் தேவையின்றி பொது மக்கள் வருவதை தவிர்க்குமாறு வேண்டுகோள்

338 0

இரத்தினபுரி போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் மருத்துவர் அனுஜா ரொட்ரிகோ, அவசரத் தேவை இருந்தால் ஒழிய வைத்தியசாலைக்கு வருவதைத் தவிர்க்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

வைத்தியசாலையின் 9 நோயாளிகள் மற்றும் 5 ஊழியர்கள் என 14 பேர் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளமை நேற்று(30) உறுதியாகியுள்ளது.

ஒரு நோயாளியைப் பார்வையிட பார்வையாளர் பலர் வருவதாக பதிவாகியுள்ளதாகவும் ஒரே நேரத்தில் ஒரு பார்வையாளர் மட்டுமே அனுமதிக்கப்படுவதால் இது சிக்கலானது என்றும் அவர் கூறினார்.

அவசர சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு வர விரும்புவோர் அவ்வாறு செய்யலாம் அல்லது 071 9902261 என்ற எண்களில் வைத்தியசாலையைத் தொடர்பு கொள்ளுமாறு அவர் மேலும் தெரிவித்தார்.