30.12.2020 இன்று புரவிப்புயல் மற்றும் மழைவெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டு யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் வாழ்ந்துவருகின்ற மக்களில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மற்றும் கடுமையாகப் பாதிப்புக்குள்ளானவர்களில் 30 குடும்பங்களுக்கு ஜேர்மன்வாழ் தமிழ்மக்களின் நிதிப்பங்களிப்பில் Help for smile நிறுவனத்தினால் உலர்உணவுப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டது.
இவ் இடர்காலப் பேருதவியினை வழங்கிய ஜேர்மன்வாழ் தமிழ்மக்களுக்கு திருநெல்வேலிப் பகுதி மக்கள் தமது நன்றியினை தெரிவித்துள்ளனர்.


