வெளிநாடுகளிருந்து மேலும் பலர் நாடு திரும்பினர்

313 0

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வெளிநாடுகளிருந்து 337 இலங்கையர்கள் இன்று (புதன்கிழமை) காலை நாட்டை வந்தடைந்தனர்.

அதன்படி, ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து 305 பேர், மாலைதீவிலிருந்து 25 பேர் மற்றும் கட்டாரிலிருந்து 07 பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர் என கொவிட்-19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு நாட்டை வந்தடைந்த அனைவருக்கும் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு பின்னர் அனைவரும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, மேலும் 150 பேர் நாட்டிற்கு வருகை தரவுள்ளனர் என கொவிட்-19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி ஐக்கிய அரபு இராச்சியம், இந்தியா, மாலைதீவு, பங்களாதேஷ், சிங்கப்பூர் மற்றும் சீனா ஆகிய நாடுகளிலிருந்து மேலும் 150 பேர் நாட்டிற்கு வருகை தரவுள்ளனர் அந்த மையம் தெரிவித்துள்ளது.