திருவண்ணாமலை அருகே எடப்பாளையம் பகுதியில் கார் மீது லாரி மோதி ஏற்பட்ட விபத்தில் 7 பேர் பலியாகினர்.
காரில் பயணம் செய்த 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் 3 பேர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்த 7 பேரும் விழுப்புரம் மாவட்டம், இளவரசன் கோட்டை பகுதியைச் சேந்தவர்கள் என்று தெரிகிறது.
காரில் திருவண்ணாமலை புறவழிச்சாலை வழியாக திருப்பதி சென்றபோது இந்த கோர விபத்து ஏற்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.

