கொரோனா தடுப்பூசிக்கான முதல் டோசை எடுத்து கொண்ட சவுதி அரேபியா பட்டத்து இளவரசர்

252 0

சவுதி அரேபியா பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுக்கு கொரோனா தடுப்பூசிக்கான முதல் டோஸ் உட்செலுத்தப்பட்டது.

கொரோனா வைரஸ் கோரப்பிடியில் சிக்கி உலகம் முழுவதும் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 8 கோடியை தாண்டியது. கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 5.5 கோடியை தாண்டியுள்ளது. 17.50 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்

உலக அளவில் கொரோனா பாதிப்பில் சவுதி அரேபியா தற்போது 35-வது இடத்தில் உள்ளது.

சவுதி அரேபியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 178 பேருக்கு தொற்று உறுதியானதால் அங்கு கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 3 லட்சத்து 61 ஆயிரத்தைக் கடந்துள்ளது

கொரோனாவால் அங்கு மேலும் 9 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பலியானோர் எண்ணிக்கை 6 ஆயிரத்து 168 ஆக உள்ளது.

இதற்கிடையே, வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை அனைத்து நாடுகளும் மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில், சவுதி அரேபியா பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுக்கு கொரோனா தடுப்பூசிக்கான முதல் டோஸ் உட்செலுத்தப்பட்டது.