ஜெயலலிதாவின் நினைவிட மாதிரி – இதோ புகைப்படம்

407 0

76837-600x287மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடம் எப்படி இருக்கப் போகிறது என்பது தொடர்பான புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

துமிழகத்தின் முன்னாள் முதல்வரான ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார்.

அவரது இறுதிச்சடங்கு சென்னையில், மெரினா கடற்கரை அருகே அமைந்துள்ள அதிமுகாவின் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் சாமாதிக்கு அருகே இடம்பெற்று, பூத உடலும் அடக்கம் செய்யப்பட்டது.

அதைத் தொடர்ந்து அவருக்கு நினைவிடம் அமைப்பது குறித்து கட்சி நிர்வாகிகள் பலரும் ஆலோசனை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் ஜெயலலிதா நினைவிடம் அமையவுள்ள இடத்தின் கட்டமைப்பு வரைபடம் வெளியாகியுள்ளது.

இதில் முன்புறம் மிகப்பெரிய தூண்களுடன், கிரீடம் போன்ற அமைப்பில் முகப்பு அமைக்கப்படுகிறது. உள்ளே சென்றால் இருபுறமும் பசுமையாக காட்சியளிக்கும் வகையில் புற்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து மத்தியில் இரண்டு கைகள் ஒன்று சேர்ந்திருக்கும் வகையில் பிரம்மாண்ட அமைப்பு வைக்கப்படுகிறது.

சமாதி அமைந்துள்ள இடத்தில் தேவதை சிலை ஒன்றும், மேல்புறம் கிரீடம் போன்றும் உருவாக்கப்பட உள்ளது. அவருடைய சமாதியில் மக்களால் நான், மக்களுக்காக நான் என்ற வார்த்தைகள் பொறிக்கப்படும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.