சம்பந்தன் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்

285 0

sdfsfafad1-600x369தமிழ் மக்களுக்கு எதிராக சிங்களவர்கள் மேற்கொண்ட அடாவடித்தனங்களுக்கு சிங்கள தலைவர்கள் பகிரங்கமாக மன்னிப்புக்கோரியதை போல் தமிழர் தரப்பினாலும் ஆயுதக் குழுக்களினாலும் மேற்கொள்ளப்பட்ட அராஜககங்களுக்கு தமிழர் தலைமைகள் பகிரங்க மனிப்புக்கோரியதில்லை.

ஆகவே சம்பந்தன் பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும் என ஜாதிக ஹெல உறுமய கட்சி தெரிவித்தது.

ஜாதிக ஹெல உறுமய கட்சியினால் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பின்போதே கட்சியின் ஊடகப் பேச்சாளர் நிஸாந்த ஸ்ரீவர்ணசிங்க இவ்வாறு குறிப்பிட்டார்.

இலங்கை தமிழர்கள் தண்டிக்கப்பட்டமை மற்றும் தமிழர் சொத்துக்கள் அழிக்கப்பட்டமை என்ற விடயங்கள் தொடர்பில் இலங்கை அரச தலைவர்கள் மன்னிப்புக் கோரிய இரு சந்தர்ப்பங்கள் இலங்கை வரலாற்றில் இடம்பெற்றுள்ளன.

குறிப்பாக சிங்கள மக்கள் மூலம் தமிழ் மக்கள் தண்டிக்கப்பட்டமை அல்லது கருப்பு ஜூலை கலவரத்தில் நடைபெற்ற அசம்பாவிதம் குறித்து ஒட்டுமொத்த சிங்கள மக்கள் சார்பிலும் மனிப்புக் கேட்பதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க மன்னிப்புக்கோரினார்.

அதன் பின்னர் யாழ் நூலகம் எரிக்கப்பட்டமை தொடர்பில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் மன்னிப்புக்கோரினார்.

உண்மையில் நாட்டின் சிறுபான்மை மக்களுக்கு எதிராக சிங்கள மக்கள் மேற்கொண்ட அசம்பாவிதங்கள் குறித்து மன்னிப்புக்கோரியமை நல்ல விடயமாகும்.

ஆனால் தமிழ் மக்களினால் தமிழர் ஆயுதக் குழுக்களினால் தற்போதைய தமிழர் அரசியல் தலைமைகளினால் சிங்கள மக்களுக்கு நடந்த அசம்பாவிதங்கள் குறித்து இதுவரையில் தமிழர் தலைமைகள் மன்னிப்புக்கோரியதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.