வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளுக்காக விமான நிலையம் எதிர்வரும் டிசம்பர் 26ஆம் திகதி முதல் திறக்கப்படுமென சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையால் பெந்தோட்ட விடுமுறை விடுதி வளாகத்தில் ‘சாயுரு இமா’ கடற்கரை மைதானம் மற்றும் கரப்பந்து திடல் என்பவற்றைத் திறந்து வைத்த பின் நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர் இதை அறிவித்தார்.
ஜனவரி மாதத்தினுள் சுற்றுலாத்துறை இயல்பு நிலைக்கு வரும் என்றும் கொவிட்-19 பரவாது தடுக்க சுகாதார அதிகாரிகளால் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்கள் கடுமையாக கடைப்பிடிக்கப்படும் என்றும் அமைச்சர் இதன்போது கூறினார்.

