மஹிந்தவின் முறையற்ற திட்டத்தால் நாடு அதிக கடன்சுமைக்கு முகம்கொடுத்துள்ளது-ரணில்

353 0

ranilமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அரசின் முறையற்ற வரித் திட்டத்தால் நாடு கடன் சுமைக்கு தள்ளப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள சுங்கத் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கருத்து தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கடந்த அரசாங்கத்தில் ஒரு ரூபாவைக்கூட வரியாக செலுத்தாது செயற்பட்ட நிறுவனங்கள் பல இனங்காணப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

பெற்றுக்கொண்ட கடனைத் திருப்பிச் செலுத்த ஒரு நாட்டினால் முடியாமலிருந்தால் அந்த நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடையும்.

அப்படிப்பட்ட சூழ்நிலையிலேயே நாம் இருந்தோம்.

கடந்த காலங்களில் நாட்டின் செலவினங்கள் வருமானத்தை விடவும் அதிகரித்திருந்தன.

வரி அறவீடுகளும், கணக்கீடுகளும் சரியான முறையில் இடம்பெறவில்லை.

இலங்கையில் எல்லோருக்கும் வரிவிலக்கு அளிக்கப்பட்டது.

சிலருக்கு 30 வருடங்களுக்கான வரிவிலக்கு அளிக்கப்பட்டது.

இதுவரையிலும் ஒரு சதமேனும் அவர்கள் செலுத்தவில்லை.

யுத்தத்தின் பின்னர் எமது செலவினங்களை ஈடு செய்வதற்குக்கூட பணம் இல்லாதிருந்தது.

இந்த நெருக்கடிகளுக்கு மத்தியில்தான் 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றது என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்தார்.