தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் மேலும் 60 பேர் கைது

283 0

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் 60 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, கடந்த ஒக்டோபர் மாதம் 30ஆம் திகதி முதல் இதுவரை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் ஆயிரத்து 349 பேர் கைதாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முகக்கவசம் அணியாமை, தனி மனித இடைவெளியைப் பேணாமை உட்பட தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், தனிமைப்படுத்தல் விதிமுறைகளையும் சுகாதாரப் பிாிவினரால் வழங்கப்படும் அறிவுரைகளையும் பின்பற்றும்படியாக பொலிஸ் தலைமையகம் பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.