முகக் கவசம் அணியத் தவறிய மற்றும் சமூக இடைவெளி யை பின்பற்றத் தவறிய குற்றச்சாட்டிலேயே கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 33 பேர் கைது செய்யப்பட்டுள்ள னர்.

கடந்த ஒக்டோபர் 30 ஆம் திகதியிலிருந்து இதுவரை முகக் கவசம் அணியத் தவறிய மற்றும் சமூக இடைவெளியைப் பின்பற்றத் தவறிய குற்றச்சாட்டில் இதுவரை 1,289 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித்ரோகண தெரிவித்துள்ளார்.

