பேக்கரி பொருட்களின் விலையை அதிகரிக்க தீர்மானமா ?

338 0

2021 ஆம் ஆண்டு முதல் பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை அதிகரிக்க வேண்டியிருக்கும் என்று இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதற்குக் காரணம், இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ வெண்ணைய்க்கான வரி 200 ரூபாவாக இருந்தது தற்போதைய அரசாங்கத்தால் இறக்குமதி செய்யும் வெண்ணைய்க்கான வரியை 600 ரூபாவாக உயர்த் தியுள்ளது.

நாட்டில் உற்பத்தி செய்யப்படும் வெண்ணையின் தரத் தில் ஏதாவது குறை ஏற்பட்டால் மற்றும் பிற காரணிகளால் வெண்ணைய் மற்றும் கொழுப்பை இறக்குமதி செய் வதைத் தவிர வேறு தீர்வு இல்லை என்று பேக்கரி உரி மையாளர்கள் சங்கம் வலியுறுத்துகிறது.