தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் ஆயிரத்து 151 பேர் கைது

293 0

அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் ஆயிரத்து 151 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன இந்த விடயம் தொடர்பாக தெரிவித்துள்ளார்.

குறிப்பாக கடந்த 24 மணித்தியாலங்களில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை கடைப்பிடிக்காத 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளியை பேணாமை உள்ளிட்ட தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறியவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.