உரிய பொறிமுறைகளை மேற்கொள்ளாது நாட்டை மீளத்திறப்பது ஆபத்தானது என பொதுச்சுகாதார பரிசோதகர்கள் சங்கம் (PHIU) எச்சரிக்கை விடுத்துள்ளது.
அரசாங்கம் எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் சுற்றுலாப்பயணிகளுக்காக மீள விமான நிலையத்தை திறக்க எதிர்பார்த்துள்ள நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் நடமாட்டத்தை அதிகாரிகள் கண்காணிப்பது மிக முக்கியமானது எனவும் அச்சங்கம் குறிப்பிட்டுள்ளது.
விமான நிலையத்தை மீளத்திறப்பது தொடர்பில் அரசாங்கம் நீண்டகாலமாக ஆராய்ந்து வருகின்றது. உரிய நடைமுறைகளுடன் அதனை மீளத்திறப்பதில் எந்தவொரு சிக்கலும் இல்லை என பொதுச்சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் எம்.பாலசூரிய ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.
வி.வி.ஐ.பி. தவிர்ந்த ஏனைய சுற்றுலாப்பயணிகள் அனைவரும் இலங்கையின் தனிமைப்படுத்தல் விதிகளை தங்கள் தூதரகங்கள் மற்றும் இலங்கை சுற்றுலாத்துறை முகவரகம் ஊடாக அறிந்திருத்தல் அவசியம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

