சிரச நிறுவனத்திற்கு எதிரான தடை உத்தரவு நீடிப்பு

376 0

எம்.டி.வி நிறுவனத்திற்கு சொந்தமான சிரச நியூஸ் பெஸ்ட் தனியார் நிறுவனத்தின் மூலம் ஜோர்ஜ் ஸ்டுவரட் ஹெல்த் தனியார் நிறுவத்திற்கும் அந்த நிறுவனத்தின் தலைவர் திலித் ஜயவீரவிற்கும் மற்றும் அந்த நிறுவனத்தின் உயர் அதிகாரிகளுக்கும் எதிராக எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அபகீர்த்தி ஏற்படும் வகையிலான செய்திகளை வெளியிட வேண்டாம் என கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தின் ஊடாக கடந்த 23 ஆம் திகதி விதிக்கப்பட்ட தடை உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த தடை உத்தரவை நீக்குமாறு MTV தனியார் நிறுவனம் நீதிமன்றத்திடம் கோரியிருந்த போது அதனை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் நிராகரித்தாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

அதனடிப்படையில் குறித்த தடை உத்தரவு டிசம்பர் 18 ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.